பாபர் மசூதி கட்டியதிலிருந்து இன்று வரை அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை!



ayodhya history


அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு, இன்று நவம்பர் 9ம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை:

 1528ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில்  முகலாய மன்னர் பாபரின் ஆணைக்கிணங்க, படைத்தலைவர் மீர் பாகினால் பாபர் மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப்பற்றி ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

1853 ஆம் ஆண்டு அயோத்தியில் முதன்முதலில் பெரும் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 75 பேர் பலியாகினர்.

1992 ஆம் ஆண்டுவரை சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலம் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

1992 ஆம் ஆண்டுடிசம்பர் மாதம் 6-ந் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது. அதனால் ஏற்பட்ட கலவரத்தில், 2,000 பேர் பலியாகினர்.

 2002 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணையை துவக்கியது.

ayodhya judgement

2010 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா - ஆகிய 3 பிரிவினரும் சமமாக பிரித்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

2011 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பிற்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து, அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மூன்று தரப்பினர் உள்ளிட்ட, 14 மேல் முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

2016 ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ராமர் கோயிலை கட்டுவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  

2018 ஆம் ஆண்டு மசூதிகள் என்பது இஸ்லாமுடன் ஒருங்கிணைந்ததில்லை என, 1994ல் அளித்த தீர்ப்பை, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2019 ஆம் ஆண்டு வழக்கை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையில், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், என்.வி.ரமணா மற்றும் யு.யு.லலித் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

2019ம் ஆண்டு மே மாதம் மத்தியஸ்த குழு இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தொடர்பான தினசரி விசாரணையை தொடங்கியது உச்சநீதிமன்றம்.

ஆகஸ்ட் 6 ஆம் தேதி உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கை தினந்தோறும் விசாரிக்க துவங்கியது.

ஆகஸ்ட் 16 ஆம் தேதி விசாரணை நிறைவடைந்து, தேதி குறிப்பிடாமல், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 8 ஆம் தேதி அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு, நவம்பர் 9ம் தேதி காலை 10:30 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.