அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் ! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.



ayodhya ramar kovil


ராமஜென்மபூமி - பாபர் மசூதி அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அரசியல் சாசன அமர்வு சார்பில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்து வந்தார். தீர்ப்பில் அவர் கூறுகையில், ஒரு பிரிவினரின் மத நம்பிக்கையை மறு பிரிவினர் மறுக்க முடியாது

அயோத்தியில் காலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பே அங்கிருந்த கட்டிடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை. அலகாபாத் நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்து வழங்கியது தவறு என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

மேலும் இஸ்லாமியர்களுக்கு, மசூதி அமைக்க 5ஏக்கர் நிலம் வக்பு வாரியம் கேட்கும் இடத்தில் வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ayodhya judgement

அயோத்தியில் 3மாதத்தில் ராமர் கோவில் கட்டும் அமைப்பை தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கான அறக்கட்டளை உருவாக்கி நிலத்தில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடரலாம் என தெரிவித்தது.

சன்னி பிரிவினர், நிலத்தின் உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் அரசிற்கு தான் சொந்தமானது, எனவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் 2.77 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும்.