திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முதலிரவு அறைக்குள் கதறிய மணமகள்.. குழந்தை பெற்றதால் ஏக்கத்துடன் காத்திருந்த மணமகன் அதிர்ச்சி..!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த மணமகனுக்கும், செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த மணமகளுக்கும் சம்பவத்தன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அன்றைய இரவு மணப்பெண் முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சில நிமிடத்திலேயே அவர் தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதியாகி உள்ளார்.
அங்கு அவருக்கு பிரசவம் நடந்து குழந்தையும் பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் மற்றும் அவரது வீட்டார், பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் மருத்துவமனைக்கு விரைந்த அவர்கள் தனது மகள் திருமணத்திற்கு முன்பே காதல் வயப்பட்டு காதலருடன் நெருங்கியதும், இதனால் அவர் ஏழுமாத கர்ப்பிணியானதால் அதனை மறைத்து திருமணம் செய்து வைத்தது அம்பலமானது.
மேலும் பெண்பார்க்கும் படலத்தின் போது வயிறு வீக்கமாக இருப்பது குறித்து கேட்கையில், அவர்கள் மருத்துவமனையில் வயிறு சம்பந்தமான சிகிச்சை பெற்று வருவதால் அவ்வாறு இருக்கிறது. விரைவில் அது சரியாகிவிடும் என தெரிவித்து நம்ப வைத்துள்ளனர். அதிர்ந்த மணமகன் வீட்டார் காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, மணமகன் - மணப்பெண்ணுடன் வாழ விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.