மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிதைந்த கனவுகள்; ஆசை ஆசையாய் பள்ளிக்கு சென்று பிணமாய் திரும்பிய சிறுமி., நொடியில் நிகழ்ந்த மரணம்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், அனேகன் அடேசொன்னஹட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தேஜஸ்வி ராவ். இவர் கூலித்தொழிலாளி ஆவார். ராவின் மனைவி கௌதமி. தம்பதிகளுக்கு லட்சுமி பிரியா என்ற 9 வயது மகள் இருக்கிறார்.
சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அவர் தினமும் தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று பள்ளிக்கு சென்ற சிறுமி, மீண்டும் வீட்டிற்கு தந்தையுடன் வந்துகொண்டு இருந்தார்.
அப்போது, சாலையில் வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தேஜஸ்வி ராவின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுமி பரிதாபமாக பலியாகினர். தேஜஸ்வி ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறையினர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
மேலும் சிறுமி ஆசை ஆசையாக பள்ளி சென்ற நிலையில் பரிதாபமாக இறந்ததாகவும், அவளின் எண்ணற்ற கனவில் எதுவும் நிறைவேறவில்லை என்றும் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.