மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பைக் டாக்சியில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ரேபிடோ ஓட்டுநர் அதிர்ச்சி செயல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியைச் சார்ந்த பெண்மணி சம்பவத்தன்று இரவு 08:30 மணியளவில் டின் பேக்டரியிலிருந்து கோரமங்களா செல்ல ரேபிடோ பைக் டாக்ஸி புக் செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த நபர் பெண்மணியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிய நிலையில், வழியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பெண்மணி கடுமையாக கண்டிக்கவே, அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே பெண்மணியை இறக்கிவிட்டு அவர் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்மணி தனது குடும்பத்தினருக்கு தொடர்பு கொண்டு நிகழ்விடத்திற்கு வரவழைத்து அங்கிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்மணி தனது ரெடிட் இணையதளத்தில் பதிவிட்டதால் இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.
முதலில் இக்குற்றச்சாட்டை விசாரித்து வருவதாக தெரிவித்த ரேபிடோ, ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட இளைஞரை பணிநீக்கம் செய்ததாக அறிவித்துள்ளது.