மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
40 வயது பெண் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. தாயின் 2 ஆவது கணவன், மகளின் கள்ளக்காதலன்..!
பெங்களூரில் 40 வயது பெண்மணி கொலை வழக்கில், மகள் கைது செய்யப்பட்டதில் பேரதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தாயின் இரண்டாவது கணவருடன் பெண்ணின் மகள் கள்ளத்தொடர்பு வைத்து, சொத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பெலந்தூர் பகுதியை சார்ந்தவர் அர்ச்சனா ரெட்டி (வயது 40). இவர் தனது முதல் கணவரான அரவிந்தை விவாகரத்து செய்து, இரண்டாவதாக நவீன் குமார் என்பவரை திருமணம் செய்து வாழ்த்து வந்துள்ளார். முதல் கணவர் மூலமாக அர்ச்சனாவுக்கு மகன், மகள் உள்ள நிலையில், கடந்த மாதம் டிச. 27 ஆம் தேதி பரப்பன அக்ரஹாரம் பகுதியில் அர்ச்சா ரெட்டி மகன் கண்முன்னே வெட்டி கொல்லப்பட்ட்டர்.
இந்த விஷயம் தொடர்பாக எலக்ட்ரானிக் சிட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அர்ச்சனா ரெட்டியை கொலை செய்ததாக இரண்டாவது கணவர் நவீன் குமார் மற்றும் மகள் யுவிகா ரெட்டி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், அர்ச்சனா ரெட்டியின் பெயரில் இருந்த சொத்துக்காக அவரை கொலை செய்தது அம்பலமானது.
நவீன் குமார், யுவிகா ரெட்டி அளித்த வாக்குமூலத்தில், "கணவரை விவாகரத்து செய்த அர்ச்சனா ரெட்டிக்கு 40 வயதாகும் நிலையில், அவரிடம் பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருந்துள்ளது. இதனால் உடற்பயிற்சியாளர் நவீன் குமார், தன்னைவிட 10 வயது மூத்த பெண்ணான அர்ச்சனா ரெட்டியை திருமணம் செய்துள்ளார். கடந்த சில மாதமாகவே அர்ச்சனா ரெட்டி - நவீன் குமார் இடையே தகராறு நடந்து வந்துள்ளது.
இதன்பின்னர், யுவிகா ரெட்டியிடம் நவீன் நெருங்கி பழகி, இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். இந்த பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறவே, கடந்த 4 மாதத்திற்கு முன்னர் மகள் யுவிகா ரெட்டி - நவீன் குமார் உல்லாச வாழ்க்கை அர்ச்சனா ரெட்டிக்கு தெரியவந்துள்ளது. மேலும், இருவரும் உல்லாசமாக இருப்பதை அர்ச்சனா ரெட்டி நேராகவே பார்த்துள்ளார்.
இதனை கண்டித்த அர்ச்சனா ரெட்டி, தனது மகளுடன் பழகுவதை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். நவீன் அதனை கேட்காமல் இருந்ததால், அவருக்கு பணம் கொடுத்து வீட்டினை விட்டு வெளியேற்றி இருக்கிறார். இதன்பின்னர், கள்ளக்காதல் ஜோடியான நவீன் குமாரும் - யுவிகா ரெட்டியும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அர்ச்சனா கொடுத்த பணமும் காலியாகியுள்ளது.
இதனால் கள்ளக்காதல் ஜோடியின் ஆடம்பர வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட, பணத்திற்காக அர்ச்சனா ரெட்டியை தீர்த்துக்கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் திட்டப்படி கடந்த 27 ஆம் தேதி நண்பர்களின் சேர்ந்து நவீன் குமார் அர்ச்சனா ரெட்டியை கொலை செய்துள்ளார். தாய் கொலை செய்யப்பட்ட பின்னர், சந்தேகம் ஏற்படாமல் இருக்க மகள் இறுதி சடங்கில் கலந்துகொண்டு நாடகமாடி இருக்கிறார். இவ்வழக்கில் தொடர்புடைய நவீன் குமார், நவீனின் கள்ளக்காதலி மற்றும் அர்ச்சனா ரெட்டியின் மகள் யுவிகா ரெட்டி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.