டேட்டிங் செய்யணுமா?.. சல்லாபத்தால் சம்பாத்தித்த 87 ஆயிரத்தை இழந்த எஞ்சினியர்..!



Bangalore Engineer Loss Money Fraud Dating Message

மெசேஜில் டேட்டிங் செய்ய விருப்பமா? இந்த நம்பருக்கு அழையுங்கள் என வந்த செய்தியை பார்த்து பரவசமடைந்த பொறியாளர் ரூ.86,900 ஆயிரம் இழந்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், எலகங்கா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 42, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கம்பியூட்டர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் அலைபேசிக்கு இளம்பெண்களுடன் டேட்டிங் செய்ய விருப்பமா? என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. 

இதனைக்கண்டு பரவசமடைந்த ராஜேஷ், குறுஞ்செய்தியை குறிப்பிடப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய மர்ம நபர், டேட்டிங் செய்ய இளம்பெண்களை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று உறுதியளித்துள்ளனர். 

முன்பணமாக ரூ.1,200 ஐ செலுத்த மர்ம நபர் கூறவே, ராஜேஷும் பணம் செலுத்தியுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் ராஜேஷை தொடர்பு கொண்ட பெண்மணி, தன்னை சுவாதி மிஸ்ரா என அறிமுகம் செய்து, என்னுடன் டேட்டிங் செய்ய எனக்கு தனிப்பட்ட தொகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

bangalore

சல்லாபத்தில் திளைத்துப்போன ராஜேஷ் பெண் கூறிய வங்கிக்கணக்கில் ரூ.86,900 பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால், பெண்மணி ராஜேசுடன் டேட்டிங் செய்ய வராமல் தவிர்க்கவே, அதிர்ச்சியடைந்த ராஜேஷ் மீண்டும் பெண்ணுக்கு தொடர்பு கொள்கையில் போன் ஸ்விச் ஆப் என வந்துள்ளது. முதலில் தொடர்பு கொண்டு பேசியவரின் அலைபேசி எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. 

இதன்பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ், பெங்களூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.