#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆர்டர் செய்யாத பொருளை கேன்சல் செய்ய ஒடிபி சொல்றீங்களா?: ரூ.38 ஆயிரத்தை இழந்து கதறும் இளைஞர்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியை சேர்ந்த விற்பனை பிரதிநிதி, சைபர் கிரைம் மோசடியாளர்களிடம் ரூ.38 ஆயிரம் பணத்தை இழந்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் Lazypay செயலியின் கணக்கின் கீழ் ரூ.38 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார்.
ஸ்விக்கியில் அவர் ரூ.5,345 பணத்திற்கு உணவு ஆர்டர் செய்ததாக குறுஞ்செய்தி பெறப்பட்ட நிலையில், அதனை சோதித்து பார்க்க வேண்டி ஓடிபி-ஐ பகிர்ந்ததை தொடர்ந்து ரூ.39,720 பணம் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து மாயமாகியுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சென்ன கேசவன்னா சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இதுகுறித்த புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நீங்கள் பொருட்கள் ஆர்டர் செய்யவில்லை எனினும், அது சார்ந்த எஸ்எம்எஸ் வந்தால் அதனை கிளிக் செய்ய என்னிடம் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.