#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தினமும் 10 மணி நேரம் குளிக்கணும், 3 சோப்பு காலியாகும்..! ஐ.டி ஊழியரின் வினோத நோய்..!
பெங்களூரை சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவர் தினமும் ஒருநாளைக்கு 10 மணி நேரம் குளிப்பதாகவும், ஒரு நாளைக்கு 3 சோப் காலியாவதாகும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், OCD (Obsessive Compulsive Disorder) என்னும் நோயினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோய் இருப்பவர்கள் தாங்கள் செய்துகொண்டிருக்கும் வேலையை மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் அதே வேலையை செய்வார்கள் எனவும், தனது கணவருக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாகிவிட்டதாகும் தெரிவித்துள்ளார்.
தினமும் காலை 3 மணிக்கு எழுந்து குளிக்க சென்றால், தான் குளித்துக்கொண்டிருப்பதை மறந்து காலை 6 மணி வரை குளிப்பதாகவும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிய பிறகு தினமும் 4 மணி நேரம் மாலையில் குளிப்பதாகவும், இதனால் ஒருநாளைக்கு 3 சோப் காலியாவதாகவும் தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரம் குளிப்பதால் அவருக்கு சரும பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், எத்தனையோ மருத்துவர்கள், மருத்துவமனைகளை நாடியும் இதுவரை தீர்வு இல்லை எனவும் வருத்தத்துடன் கூறியுள்ளார் அவரது மனைவி.