#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"மச்சான், புட் ஆப் ஹெல்மட் டா" - பப்ஜி ஸ்டைலில் சாலை விதிமுறை விழிப்புணர்வு.!! அசத்தும் காவல்துறை..!
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது, தோள்பட்டை கவசம் அணிந்து கார் ஓட்டுவது போன்ற கனரக வாகனங்களை இயக்குவது விபத்து ஏற்படும் காலங்களில் நம்மை பாதுகாக்க உதவி செய்யும்.
ஆனால், இந்தியாவில் மட்டும் உயிர்காக்கும் நடவடிக்கைகள் என்பது காவல்துறையினர், மக்களுக்கு மிகுந்த எச்சரிக்கை, கண்டிப்பு, அபராதம் போன்ற செயல்களால் மேற்கொள்ளப்படும் சூழல்கள் ஏற்பட்டு இருக்கின்றன. தற்போது அந்நிலை என்பது குறைந்துள்ளது.
இளைஞர்களுக்கு அவர்களின் பாணியில் அறிவுரை
இந்நிலையில், இன்றளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் கொண்ட பப்ஜி விளையாட்டை வைத்து, பெங்களூர் காவல் துறையினர், தலைக்கவசம் குறித்து நூதன விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: நிலச்சரிவில் சரிந்த குடும்பம்; வருங்கால கணவரையும் விபத்தில் இழந்த பெண்.! நீங்காத வடுவாக வயநாடு துயரம்.!!
அந்த காணொளியில், பப்ஜி கேம் விளையாடும்போது "மச்சான் புட் ஆப் ஹெல்மட் டா, ஓவர் ஸ்பீடிங் பெஸ்ட் இன் கேம், ஒர்ஸ்ட் ஆன் ரோட்" என வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது, ஹெல்மட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், கேமில் மட்டும் வேகம் நல்லது, நிஜ சாலைகளில் வேகம் தேவையில்லாதது" என்பது போல் வசனங்கள் இடம்பெற்று கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: #Breaking: CPM பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி காலமானார்.!!