#Breaking: CPM பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி காலமானார்.!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுடெல்லியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். 72 வயதாகும் அவர், அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனிடையே, தீவிர உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட யெச்சூரி, நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
செயற்கை சுவாசம்
இருப்பினும் யெச்சூரியின் உடல்நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து, அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்..!
இதையும் படிங்க: #Breaking: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்..!