96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#Breaking: 23 வயது இளம்பெண், 9 மாத கைக்குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: அதிர்ச்சியூட்டும் வீடியோ உள்ளே.. தீயில் கருகி நடந்த சோகம்.!
தமிழகத்தை சேர்ந்த பெண்மணி பெங்களூரில், தனது கைக்குழந்தையுடன் வீட்டிற்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கண்கலங்க வைக்கும் அதிர்ச்சி வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர், கடுகோடி, ஹோப் பார்ம் பகுதியில் உள்ள நடைபாதையில், இன்று காலை இளம்பெண் தனது கைக்குழந்தையுடன் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அச்சமயம், நடைபாதையில் மின்கம்பி அறுந்து கிடக்க, அதனை கவனிக்காமல் சென்ற பெண்மணி உயர் அழுத்த மின்கம்பியை மிதித்து, அதன் மீதே விழுந்ததால் குழந்தை மற்றும் பெண்ணின் உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.
இளைஞர் ஒருவரின் கண்முன்னே நடந்த கொடூரம் பதைபதைப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கடுகோடி காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து தீயில் எரிந்து கருகிய இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சென்னையில் இருந்து இன்று காலை பெங்களூருக்கு சென்ற பெண்மணி சௌந்தர்யா (வயது 23), அவரின் 9 மாத பெண் கைக்குழந்தை சுவிக்சா ஆகியோர் உயிரிழந்தது உறுதியானது.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அம்மாநிலத்தில் மின்விநியோகம் செய்து வரும் பெஸ்காம் பணியாளர்கள் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்-மகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெங்களூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் பதைபதைப்பு விடீயோக்களும் வெளியாகி இருக்கின்றன.
DISTURBING VIDEO: A woman and her baby were burnt alive after coming in contact with a live wire lying on the roadside in Bengaluru. The incident happened at 5 am today and a case was filed in this regard. #Bengaluru pic.twitter.com/uu9fNhyRfq
— Vani Mehrotra (@vani_mehrotra) November 19, 2023