வங்கக் கடலில் உருவானது “மிதிலி”புயல்... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!



bay-of-bengal-strengthened-into-cyclone-mithili

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மிதிலி புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பிற்கு கிழக்கே 200 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

மிதிலி புயலானது வடக்கு- வட கிழக்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வங்கதேசத்தின் மோங்கா, கொபுரா கடற்கரை இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் போது மணிக்கு 60 முதல் 70 கிமீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Baby of Bengal

இதன் காரணமாக தமிழக கடலோரம், ஒடிசா கடலோரம், வங்கதேச கடலோரம், இலங்கை கடலோரம் பகுதியில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

​​​​