ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நண்பனிடம் வாங்கிய கடனை திருப்பி தராததால், அவரின் மனைவியை கர்பமாக்கிய நண்பன்!.
கர்நாடக மாநிலத்தில், வாங்கிய கடனை நண்பர் திரும்பி செலுத்தாததால் அவரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஒரே ஹொட்டலில் வேலை செய்துவந்துள்ளனர். இருவரும் நெருங்கிய நண்பராகவும் இருந்துள்ளனர். தலக் என்பவர், தன்னுடன் வேலை செய்யும் பார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.
இந்நிலையில் நண்பர் ரமேஷிடம் குடும்ப செலவுக்காக தலக் ரூ.500 கடனாக வாங்கிய நிலையில் அதை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கடனை திரும்ப தராததால் தன் மனைவியை இரண்டு மாதங்களுக்கு முன்னர் ரமேஷ் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக தலக் தற்போது கூறியுள்ளார்.
தலக் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு முன்னர் என் மனைவி பார்வதியை, ரமேஷ் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார். நான் எவ்வளவோ கூறியும் எனது பேச்சை இருவரும் கேட்கவில்லை. எனக்கும் எனது நண்பனுக்கும் கடனால் பிரச்சனை வந்தது. தற்போது மனைவியை இழந்து தவிக்கிறேன் என கூறினார்.
தற்போது பார்வதி மீண்டும் கர்ப்பமாக உள்ளார், நான் பலமுறை எச்சரித்தும், என்னுடன் சேர்ந்து வாழ மறுக்கிறார். இது குறித்து ரமேஷிடம் கேட்டால் அவர் என்னை மிரட்டுகிறார்.
நான் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, இதனால் இன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செய்தேன் என கூறியுள்ளார்.