மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்ணை ஆபாச வீடியோ எடுத்த உறவினர் பெண்.. ஓட்டல் ரூமில் வைத்து, நடந்த மோசம்.. கொத்தாக அள்ளிய போலீஸ்.!
பெங்களூரு கெஞ்சன்புரா பகுதியில் விடுதி ஒன்று ஓட்டலுடன் இயங்கி வருகின்றது. இந்த விடுதியின் உரிமையாளர் நயனா என்ற பெண் அவருடன் அவரது கணவர் கிரணும் ஹோட்டல் நடத்த உதவி வருகின்றார். நயனாவின் உறவினர் பெண் ஒருவர் எம்பிஏ படித்து வந்துள்ளார். அடிக்கடி அந்த ஓட்டலுக்கு அவர் சென்று வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய காதலனுடன் அவர் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தெரிந்து கொண்ட நயனா மற்றும் அவருடைய கணவர் கிரண் இருவரும் அவர்கள் தங்கும் அறையில் ரகசியமாக கேமராவை பொருத்தி காதல் ஜோடி இருவரும் உல்லாசமாக இருந்ததை வீடியோ பதிவு செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த பெண்ணின் வாட்ஸாப் எண்ணிற்கு இந்த வீடியோவை அனுப்பி வைத்து மற்ற உறவினர்களுக்கு அனுப்பி உன்னை மானபங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக தனது பெற்றோரிடம் தெரிவித்து அவர்களுடன் சென்று போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து ஹோட்டல் அறைகளில் பரிசோதனை மேற்கொண்டதில் பல்வேறு இடங்களில் இது போல ரகசிய கேமராக்களை அவர்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நயனா மற்றும் கிரண் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.