மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலித்த பெண்ணிற்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம்... ஆத்திரத்தில் காதலன் எடுத்த விபரீத முடிவு.!
கர்நாடக மாநிலத்தில் காதலிக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் ஆத்திரமடைந்த காதலன் அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் யாதகிரி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் பெற்றோர் இறந்து விட்ட நிலையில் தனது மாற்றுத்திறனாளி சகோதரருடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சச்சின் என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் வேறொரு நபருடன் அந்த பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் நடத்தி இருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் காதலன் சச்சின் அந்தப் பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை ஆளில்லாத காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற அவரை அந்தப் பகுதி மக்கள் காப்பாற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண்ணை கொலை செய்த அவரது காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.