மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாகன ஓட்டிகளே உஷார்!! உயிரே போய்விடும், தயவுசெய்து இதை மட்டும் செய்யாதீங்க!!
கிருஷ்ணகிரி மாவட்டம் புளியரசி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் சமீபத்தில் சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது செல்போனிற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
உடனே அவர் தனது செல்போனை ஆன் செய்து அதனை தனது ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசிக் கொண்டே சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென ஹெல்மெட்டுக்குள் இருந்த செல்போன் அதிக வெப்பம் காரணமாக அதிக சத்தத்துடன் வெடித்துள்ளது.இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற ஆறுமுகம் பலத்த காயமடைந்து, நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஆறுமுகத்திற்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர். ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக சூளகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
பின்னர், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் செல்போன்கள் பயன்படுத்துவதில் மிகவும் கவனம் தேவை. தரமான நிறுவனங்களின் செல்போன், பேட்டரிகளைபயன்படுத்த வேண்டும். வண்டியை ஓட்டிக்கொண்டோ அல்லது ஹெல்மெட்டுக்குள் வைத்தோ செல்போன் பேசக்கூடாது. செல்போன் சார்ஜ் போட்டு எடுத்த பிறகு 10 நிமிடங்கள் கழித்தே போன் பேச வேண்டும் என முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது.