ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
22 வயது சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது.. அலுவலகத்தில் நடந்த பயங்கரம்..!
அலுவலகத்தில் பகுதி நேரம் வேலைபார்த்துக்கொண்டு பயின்று வந்த சட்டக்கல்லூரி மாணவியிடம் அத்துமீற முயன்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் நிரஞ்சன் குமார். இவரின் அலுவலகத்தில் சட்டம் பயின்று வரும் 22 வயதுடைய மாணவி பகுதிநேரமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மாணவியின் மீது காம எண்ணம் கொண்ட வழக்கறிஞர் நிரஞ்சன் குமார், அவரை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு அவ்வப்போது சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரியவருகிறது.
முதலில் இதனை மாணவி பெரிதாக கருதவில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று தனது அலுவலகத்தில் மாணவியுடன் தனியே இருந்த நிரஞ்சன் குமார், வேலைபார்த்துக்கொண்டு இருந்த மாணவியிடம் அத்துமீற முயற்சி செய்துள்ளான்.
இதனால் பதறிப்போன மாணவி அலறியபடி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். பின்னர் விபரம் தெரியவரவே, பீகார் காவல் துறையினர் வழக்கறிஞருக்கு எதிராக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.