மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசையாக கேக் வாங்கி காதலியை பார்க்கச்சென்ற காதலன்; கை-கால்களை உடைத்து மருத்துவமனைக்கு அனுப்பிய சொந்தங்கள்..! வீடியோ உள்ளே.!
பீகார் மாநிலத்தில் உள்ள சஹாபிரா, ட்ரையா காவல் எல்லைக்குட்பட்ட ஷீட்டால்பூர் பகுதியை சேர்ந்தவர் அஸ்மாத் அலி (வயது 20). அங்குள்ள சஹோதா மாத்வபூர் பகுதியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மலர்ந்துள்ளது. இதனையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று காதலிக்கு பிறந்தநாள். காதலியுடன் பிறந்தநாளை கொண்டாட கேக் வாங்கிய காதலன், இரவு 09:00 மணியளவில் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
முதலில் அங்கு குடும்பத்தினர் இல்லாததால், காதலி காதலனை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். திடீரென குடும்பத்தினர் வந்துவிடவே, மறைவான இடத்தில் காதலனை ஒழிந்துகொள்ள வைத்துள்ளார்.
ஆனால், காதலியின் தங்கை எதற்ச்சையாக இளைஞரை கண்டு திருடன் என அஞ்சி அலற, சத்தம் கேட்டு கையில் தடியுடன் வந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் 20 பேர், இளைஞரை சரமாரியாக நொறுக்கித்தள்ளினர்.
இதனால் கை-கால்களில் படுகாயம் அடைந்த இளைஞன் உண்மையை சொல்லி கதற, அவர்கள் காவல் துறையினர் வசம் இளைஞரை ஒப்படைத்தனர். காவல் துறையினர் இளைஞரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
தற்போது கை-கால்கள் உட்பட உடலின் பல பகுதிகளில் மாவுக்கட்டு போட்டுகொண்டு சிகிச்சை பெற்று வரும் இளைஞரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிபட தெரிவிக்கின்றனர்.
छपरा में गर्लफ्रेंड के बर्थडे पर केक काटने पहुंचा था प्रेमी, परिजनों ने पीटकर पुलिस के हवाले किया. अब अस्पताल में इलाज चल रहा. pic.twitter.com/gJT2iROiRE
— Utkarsh Singh (@UtkarshSingh_) September 20, 2023