மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்?.. அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்.!
அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் செய்தபின்னர், கட்டாயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரில் வைத்து, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பது உறுதியாகும். ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்படி நடத்தப்பட வேண்டும் என அனைவரிடமும் கருத்து கேட்கப்படும்.
இதுகுறித்து கருத்துக்களை கேட்கவும், அவரவரின் அனுபவத்தை எடுத்துரைக்கவும் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் அனைவருக்கும் பயனளிக்கும். இதனால் எதிர்காலத்தில் மக்களும் பயன்பெறுவார்கள். இந்த கூட்டம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஜாதிவாரி கணக்கெடுப்பு முறையாக செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.