மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: முதல்வர் கலந்துகொண்ட கூட்டத்தில் வெடிகுண்டு வீச்சு.. மாநிலமே அதிர்ச்சி.. ஒருவர் கைது.!
முதல்வரின் மக்கள் சந்திப்பின் போது மர்ம நபர் வெடிகுண்டு வீசிய நிலையில், அதிகாரிகள் குற்றச்செயலில் ஈடுபட்டவரை கைது செய்தனர். நல்ல வேலையாக எவ்வித காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார் இன்று பாட்னாவில் உள்ள நாலந்தா பகுதியில் மக்களிடையே உரையாற்றிக்கொண்டு இருந்தார். அப்போது, இன்று அங்கு வந்த மர்ம நபர் திடீரென வெடிகுண்டுகளை வீசியுள்ளார்.
நல்ல வேலையாக வெடிகுண்டு தாக்குதலில் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படாத நிலையில், வெடிகுண்டு வீசியவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
வெடிகுண்டுகள் குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் ரகத்தினை சேர்ந்தது என்றும் தெரியவந்துள்ளது. இதனால் எதற்காக அவர் குண்டு வீசினார்? அதிகாரிகளை திசைதிருப்ப முயற்சித்தாரா? எனவும் விசாரணை நடைபெறுகிறது.