திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த கணவனின் கொடூர செயல்.. வெளியான பதைபதைப்பு வீடியோ.!
தனது மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த கணவனின் கொடூர செயல் தொடர்பான பதைபதைப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி பெண்ணொருவரின் முகத்தில் வெள்ளை மற்றும் கருப்பு நிற வர்ணம் பூசப்பட்டு, சில நபர்களால் தாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இந்த விஷயம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ தொடர்பான தகவல் காவல் துறையினருக்கும் தெரியவரவே, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். விசாரணையில், பெண்ணை தாக்கி இழுத்து செல்பவர் ரன்வீர் சதா என்பதும், அவர் தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் என்பதும் உறுதியானது.
HORRIFIC VISUALS
— Utkarsh Singh (@UtkarshSingh_) February 17, 2022
दरभंगा में अवैध संबंध के शक में एक पति ने अपनी पत्नी का सिर मुंडवाकर, उसके आधे चेहरे पर कालिख और आधे चेहरे पर पेंट पोत कर गांव में घुमाया. ग्रामीणों ने महिला पर डायन होने का आरोप लगाया. पुलिस ने पति को गिरफ्तार किया, कुशेश्वरस्थान के छपकही झाझरा गांव का मामला. pic.twitter.com/W4mFFgy0qu
இதனையடுத்து, ரன்வீர் சதாவை கைது செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மனைவிக்கு வேறொருவருடன் கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகமடைந்த கணவர், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி முகத்தில் நிறம் ஊற்றி வீதி வீதியாக ஊர்வலம் சென்றது அம்பலமானது. இவ்வழக்கில் தொடர்புடைய பிறரையும் அதிகாரிகள் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.