திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போதைமருந்து கேட்டு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வன்முறை.. பீகாரில் பதற்றம்.. பரபரப்பு.!
மருந்துக்கடையில் போதையை தரும் மருந்துகளை தரச்சொல்லி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா நகரில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் இருக்கும் மருந்துக்கடை விற்பனையாளர்களுக்கும் - மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதமானது மோதலில் முடியவே, அங்கிருந்த 4 கடைகள் மாணவர்களால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக்கடை ஊழியருக்கு கத்திகுத்தும் விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பதறியபடி ஓட்டம் எடுத்துள்ளனர்.
மேலும், உச்சகட்டத்தை நோக்கி சென்ற வன்முறை காரணமாக கடைகள், வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இதனால் மருந்து விற்பனையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றத்தை தணிக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விஷயம் தொடர்பாக மருந்துக்கடை விற்பனையார்கள் தெரிவிக்கையில், "மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போதையை தரும் மருந்துகளை கேட்டார்கள். நாங்கள் அதை கொடுக்க மறுத்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொலைவெறி சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்தனர்.