மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமி பள்ளி வளாகத்தில் பலாத்கார முயற்சி: ஆசிரியரின் அதிரவைக்கும் செயல்.!
பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சுபாஷ் மஞ்சு.
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உணவு இடைவேளையின் போது, இவர் தனது பள்ளியில் பயின்று வரும் சிறுமியை மேல் தளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்திருக்கிறார்.
பதறிப்போன சிறுமி அங்கிருந்து தப்பி தனது வகுப்பறைக்கு வந்திருக்கிறார். மாலை நேரத்தில் வீட்டிற்கு சென்று இது தொடர்பாக பெற்றோரிடம் கூறவே, அவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.