திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே பிரசவத்தில் பெண் 5 குழந்தைகள்; மகிழ்ச்சியின் உச்சத்தின் குடும்பத்தினர்.!
பீகார் மாநிலத்தில் உள்ள கிஷான்கண்ச் மாவட்டம், தாகூர்கஞ்ச் கனக்பூர் பகுதியில் வசித்து வருபவர் தாஹிரா பேகம் (வயது 25). இவருக்கு 3 வயதுடைய மகன் இருக்கிறார். இதனிடையே, 2 வது பெண் குழந்தை வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டுள்ளது.
5 குழந்தைகளை வயிற்றில் சுமந்த பெண்மணி:
இதனையடுத்து, கர்ப்பமான பேகத்துக்கு மருத்துவ பரிசோதனையில் வயிற்றில் 5 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் பெண்ணிடம் பேசி அவரை அமைதிப்படுத்தி பிரசவத்திற்கும் உறுதுணையாக இருந்தனர்.
பிரசவத்திற்கு பின் தாய்-சேய் நலம்:
கடந்த சனிக்கிழமை அங்குள்ள கிளீனிக்கில் பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட பேகத்துக்கு நேற்று 5 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தது. 5 குழந்தைகளும் பெண் குழந்தைகள் ஆவார்கள். தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.