மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் சூனியம் வைத்ததாக உயிருடன் வீட்டில் வைத்து எரித்து கொலை... துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
உடல்நலக்குறைவால் ஒருவர் உயிரிழந்ததற்கு பெண் வைத்த சூனியம் காரணம் என எண்ணி தீயில் எரித்து கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டம், துமரியா பஞ்சவா கிராமத்தில் வசித்து வருபவர் ரீட்டா தேவி (வயது 45). இவர் மர்மமான முறையில் தீயில் கருகி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்து அதிகாரிகள் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, சந்திரதேவ் மஞ்சி என்ற நபரின் மகன் கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கிறார். இந்த இறப்புக்கு மஞ்சி ரீட்டா காரணம் என்றும், அவர் சூனியம் வைத்துள்ளார் என்றும் சந்திராதேவ் நம்பி இருக்கிறார்.
இதனால் சந்திரதேவ் மற்றும் அவரின் உறவினர்களும் சேர்ந்து ரீட்டா தேவியுடைய வீட்டினை தாக்கி தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் ரீட்டா தேவி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரீட்டா தேவியின் மகன் அமித் குமார், கணவர் அர்ஜுன் தாஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்த முயற்சித்தபோது காவல் துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.