மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரம்; எரித்துக்கொலை செய்த தாய்க்கிழவி.!
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி, தனது சொந்த பேத்தியை கொலை செய்து உடலை எரித்த சம்பவம் நடந்துள்ளது. இவ்வழக்கு தொடர்பான விவகாரத்தில் முசாபர்நகர் மாவட்டம், அம்மா சோஹிஜன் கிராமத்தை சேர்ந்த வயோதிக தம்பதிகளான சரோஜ் தேவி மற்றும் அவரது கணவர் அசோக் ஓஜிஹா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், வயோதிக தம்பதியின் மருமகள் கோமல் தேவி கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தையை பிரசவித்து இருக்கிறார்.
குடும்பமே கோமல் தேவி ஆண் குழந்தையை பிரசவிப்பார் என காத்திருந்ததாக தெரியவருகிறது. ஆனால், பெண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தினர் அதனை ஏற்றுக்கொண்டாலும், வயோதிக தம்பதி அதனை ஏற்காமல் வஞ்சத்துடன் இருந்துள்ளது.
சம்பவத்தன்று தனது சொந்த பேத்தியை இருவரும் சேர்ந்து கொலை செய்து உடலை தீயிட்டு எரித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தகவல் அறிந்த பின்னர், விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.