திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதல் ஜோடியை பழிவாங்க பகீர் செயலில் இறங்கிய கணவர்.. கள்ளகாதலரின் மனைவியை கரம்பிடித்து பரபரப்பு சம்பவம்.!
தனது அன்பு மனைவி கள்ளழகத்தாளருடன் ஊர் பஞ்சாயத்தை மீறியும் சென்றுவிட, அவர்களை பழிவாங்க எண்ணி செயல்பட்ட கணவர் செய்த சம்பவம் விவாதமாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் நீரஜ். இவரின் மனைவி ரூபி தேவி. தம்பதிகளுக்கு கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூபிக்கு முகேஷ் என்பவரோடு அறிமுகம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறவே, இந்த விவகாரம் நீரஜுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் - மனைவி சண்டை நடந்துள்ளது.
இதற்கிடையில், 2022 பிப்ரவரி மாதம் ரூபி தனது கள்ளகாதலர் முகேஷோடு திருமணம் செய்தார். இந்த தகவலை அறிந்த நீரஜ் ஓரோர் பஞ்சாயத்தை கூட்டினார். பஞ்சாயத்தில் ஊர் கட்டுப்பாடை மீறியதாக இருவரும் ஊரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த விஷயத்தில் விரக்தியடைந்து பழிவாங்க நினைத்த நீரஜ், முகேஷின் மனைவியான அதே பெயர் கொண்ட ரூபியை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தகவல் தான் தற்போது நெட்டிசன்களுக்கு தெரியவந்து விவாத பொருளாகியுள்ளது. முகேஷ் - ரூபி தம்பதிக்கு 2 குழந்தைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.