திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுமியை சீரழித்த கயவன் நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக்கொலை.. சிறுமியின் தந்தை பரபரப்பு சம்பவம்.!
மகளை கடத்தி சென்று வாழ்க்கையை சீரழித்த குற்றவாளியை, தந்தை நீதிமன்றத்தில் வைத்தே சுட்டு கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்திலுள்ள முஸாபர்பூர் நகரில் வசித்து வருபவர் தில்ஷாத் ஹுசைன். இவரின் வழக்கறிஞர்கள் அவருக்கு அழைத்து கொடுத்ததன் பேரில், கோரக்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இவர் வழக்கறிஞரை சந்திக்க காத்திருந்த போது, அங்கு வந்த நபர் துப்பாக்கியால் தில்ஷாத்தின் தலையில் சுட்டுவிட, அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த நீதிமன்ற பாதுகாவலர்கள், துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்தனர். விசாரணையில், தில்ஷாத் ஹுசைன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும், அவரை சுட்டு கொலை செய்தவர் ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்பு படைவீரர் பகவத் நிஷாந்த் என்பதும் தெரியவந்தது.
பகவத் நிஷாந்த் ஓய்வுக்கு பின்னர் வீட்டருகே சைக்கிள் கடை நடத்தி வந்த நிலையில், தில்ஷாத் ஹுசைன் பகவத்தின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் அவரின் மகளை கடந்த 2020 ஆம் வருடம் கடத்தி சென்றுள்ளார். பின்னர், 2021 மார்ச் மாதம் ஐதராபாத் நகரில் வைத்து தில்ஷாத் கைது செய்யப்பட்டு, பகவத்தின் மகள் மீட்கப்பட்டார்.
காவல் துறையினரின் விசாரணையில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியாகவே, தில்ஷாத்தின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த தில்ஷாத்தை கொலை செய்ய பகவத் திட்டமிட்டு இருந்த நிலையில், அவர் தலைமறைவுடன் காணப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு வந்து சென்றுள்ளார்.
இந்த தகவலை பகவத் நீதிமன்ற விசாரணை நாளுக்காக காத்திருந்து, தனது மகளின் வாழ்க்கையை சீரழித்த தில்ஷாத்தை திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது.