மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடனை திரும்பக்கேட்ட தலித் பெண் மீது கொடூரம்; சிறுநீர் குடிக்கவைத்து, ஆடையை அவிழ்த்து தந்தை-மகன் அட்டூழியம்.!
பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் வசித்து வரும் நபர் பிரமோத். இவரின் மகன் அன்சு. இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த பெண்ணிடம் ரூ.1500 கடன் வாங்கியுள்ளார்.
சகோதரத்துவ பழக்கத்தின் அடிப்படையில் பெண்ணும் கடன் கொடுத்த நிலையில், கொடுத்த பணத்தை பெண்மணி கேட்டபோது, அவரை சமுதாய ரீதியாக தந்தை-மகன் இழிவுபடுத்தி பேசி இருக்கின்றனர்.
மேலும், பெண்ணை கடுமையாக தாக்கி, அவரின் ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து, சிறுநீர் குடிக்க வைத்து அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.
இவர்களின் பிடியில் இருந்து தப்பிய பெண்மணி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் தந்தை-மகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.