திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
16 வயது சிறுமியை தனியே அழைத்துச்சென்று, மூவராக இணைந்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை: தெரிந்தவர் என நம்பி சென்று நடந்த சோகம்.!
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று 16 வயது சிறுமி ஒருவர், நோயாளியான உறவினர் ஒருவரை நேரில் சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது சிறுமிக்கு அறிமுகமான மந்தோஷ் குமார் என்பவர், சிறுமியிடம் பேச்சுக்கொடுத்தவாறு மருத்துவமனை வளாகத்திற்குள் கட்டிடப்பணிகள் நடைபெற்று வந்த இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் வெளி ஆட்கள் இல்லை.
அங்கு மந்தோஷ் குமாருடன் இரண்டு பேர் சேர்ந்துகொண்டு நிலையில், 16 வயது சிறுமியை மூவர் கும்பல் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கண்ணீருடன் விவரித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், அங்குள்ள அஹியாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி, குற்றத்தில் ஈடுபட்டவர்களில் சந்தோஷ் குமார் என்பவரை மட்டும் கைது செய்துள்ளனர். எஞ்சிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.