#JustIN: இரயில் எஞ்சின், 2 ட்ராலிகளுடன் ஊழியர் மாயம்?.. பீகார் அருகே அதிர்ச்சி சம்பவம்..!



bihar-purnia-railway-station-2-trolleys-diesel-loco-she

2 ட்ராலிகளுடன் தலைமறைவாகியுள்ள இரயில்வே ஊழியரை தனிப்படை அமைத்து அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் உள்ள பூர்ணியா இரயில் நிலையத்தில் இருந்து டீசல் லோகோ எஞ்சின், 2 ட்ராலி மாயமாகியதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் விசாரணை செய்த அதிகாரிகள் தெரிவிக்கையில், பூர்ணியா இரயில் நிலையத்தில் இருந்து சமஸ்திபூருக்கு ட்ராலிகள் கொண்டு வரவேண்டிய பணி இருந்தது. 

Bihar

அதற்காக ஊழியரும் நியமனம் செய்து அனுப்பப்பட்ட நிலையில், ஊழியர் அந்த பணியை செய்யவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர் குறித்த விசாரணை நடந்து வருகிறது. அவரை கைது செய்யவும், ட்ராலிகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். 

Bihar

மேலும், இந்த விஷயம் தொடர்பாக சமஸ்திபூர் டி.ஆர். எம் தெரிவிக்கையில், "இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. காணாமல் போன பொருட்களில் இரயில் எஞ்சின் இல்லை.ட்ராலியை ஷெட்டுக்கு எடுத்து வரும் தொழிலாளி, ஷெட்டுக்கு எடுத்து வரவில்லை. குற்றம் செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.