மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட அனுமதிக்காததால் ஆத்திரம்: கணவரை போட்டுத்தள்ளிய மனைவி.!
ரீல்ஸ் மோகத்திற்கு அடிமையான பெண்மணி செய்த அதிர்ச்சி காரியம் பலரையும் அதிரவைத்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டம், கோதபன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வர் குமார் ராய். இவர் கொல்கத்தாவில் தங்கியிருந்து பணியாற்று வருகிறார். அவ்வப்போது தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இவருக்கு திருமணமாகி ராணி குமாரி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ போடும் பழக்கத்தைக் கொண்டிருந்த ராணிகுமாரி, அவ்வப்போது பாடல்களுக்கு நடனமாடி அதனை வெளியிடுவது வழக்கம்.
தம்பதிகளுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற முடிந்த நிலையில், வெளியூரில் கணவர் வேலை பார்ப்பதால் பொழுதுபோக்காக இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட தொடங்கியவர் பின்னால் அதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இது தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படுத்திய நிலையில், இருவரும் சண்டையிட்டும் இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ராணி குமாரி தனது பெற்றோரின் வீட்டிற்கு வந்துவிடவே, தனது மனைவியை பார்க்க மகேஷ்குமார் மாமனாரின் வீட்டிற்கு வந்து தங்கி இருந்துள்ளார்.
சம்பவத்தன்று அவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், மகேஸ்வர் குமாரின் உறவினர்கள் அளித்த புகார் பேரில் நடந்த விசாரணையில் அதிர்ச்சி சம்பவம் அம்பலமானது.
மேலும், கணவர் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பதிவிட அனுமதிக்காமல் பிரச்சனை செய்வதால், தனது தம்பியுடன் சேர்ந்து அவரை கொலை செய்ததாகவும் குமாரி தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் குமாரி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் சகோதரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.