மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: 2 சரக்கு இரயில்கள் மோதி பயங்கர விபத்து; இரயில் ஓட்டுனர்கள் படுகாயம்., பஞ்சாபில் அதிர்ச்சி.!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள படேகர்க் மாவட்டம், சர்ஹிந்த் பகுதியில் இன்று காலை 2 சரக்கு இரயில்கள் மோதி பயங்கர விபத்தில் சிக்கின.
சிர்ஹிந்தில் உள்ள மதோபூர் பகுதியில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. இந்த பயங்கர விபத்தில், 2 இரயில் ஓட்டுனர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு இரயில் ஓட்டுனர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: தொண்டர்களின் ஆசையால் தலையில் விழுந்த துலா பாரம்; காயமடைந்த பெண் வேட்பாளர்.!
இரயில் விபத்து குறித்து விசாரணை
மேலும், அவ்வழியாக இயக்கப்படும் பிற இரயில் சேவைகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். இரயில் விபத்துக்கான காரணம் குறித்து உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது.
நல்வாய்ப்பாக பயணிகள் இரயிலுடன் சரக்கு இரயில் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்காத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ட்டுள்ளது.
#WATCH | Punjab: Two goods trains collided near Madhopur in Sirhind earlier this morning, injuring two loco pilots who have been admitted to Sri Fatehgarh Sahib Civil Hospital. pic.twitter.com/0bLi33hLtS
— ANI (@ANI) June 2, 2024
இதையும் படிங்க: 5 வயது சிறுமியை அழைத்துச்சென்று சீரழித்த 15 வயது சிறுவன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் கொடூரம்.!