#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
20 வயது இளம்பெண் 5 பேர் கும்பலால் கற்பழிப்பு.. கால்வாயில் கொன்று பிணமாக வீசப்பட்ட பயங்கரம்.!
இளம்பெண் 5 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலி கிராமத்தை சார்ந்த 20 வயது இளம்பெண், பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த டிச. 20 ஆம் தேதி இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்த நபர்கள், துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர்.
மகளை மீட்க பெற்றோர்கள் முயற்சித்த போதிலும், இரண்டு நாட்களில் விட்டுவிடுவோம் என்று கூறி அவர்களையும் மிரட்டி சென்றுள்ளனர். பெற்றோர்கள் மகளின் நிலை என்ன என்று தெரியாமல் விழிபிதுங்கி இருந்த நிலையில், இளம்பெண் டிச. 22 ஆம் தேதி அங்குள்ள கால்வாயில் பிணமாக மிதந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் மக்கள் கூறுகையில், 20 வயது இளம்பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர், டிச. 22 ஆம் தேதி அவரை கொலை செய்து கால்வாயில் வீசி இருக்கின்றனர்.
இந்த விஷயம் நடந்து கிட்டத்தட்ட 7 நாட்கள் ஆகும் நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளத்தில் காவலர்களுக்கு கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.