காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட விவகாரம்; மரண தண்டனையே தீர்வு - குஷ்பூ ஆவேசம்.!
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் பெண்கள் 2 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலம் அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின.
இந்த விசயத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, "மணிப்பூரில் வன்முறை என்ற போர்வையில் பெண்களை வன்கொடுமை செய்த காட்சி அதிர்ச்சியை தருகிறது.
பலரின் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தி, அதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது வேதனையை தருகிறது. ஒருவருக்கு கூட பெண்ணை காப்பாற்றும் எண்ணம் வரவில்லை. இவ்வாறான கொடுமைகளை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.
நல்ல குடிமகனாக இவ்வாறான அவலம் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். இந்தியாவில் எங்கு என்ன நடந்தாலும் பெண்களை குறிவைத்தே தாக்கி வருகிறார்கள். இதற்கும் பெண்களை அவமதிப்பதற்கும் சம்பந்தம் என்ன?.
இதற்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். இப்பிரச்சனையை அரசியல் ரீதியாக கருதாமல், மனிதாபிமான அடிப்படையுடன் அனைவரும் பெண்களுக்கு ஆதரவாக ஒன்று திரள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.