மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்கிங்... அலுவலகத்தில் சடலமாக கிடந்த பிஜேபி நிர்வாகி.!! இளம் பெண்ணிடம் தீவிர விசாரணை.!!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் அந்தக் கட்சியின் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்சி அலுவலகத்தில் நிர்வாகி சடலம்
மேற்குவங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள உஸ்தி நகரில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பாஜக கட்சியை சேர்ந்த நிர்வாகியின் சடலம் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டு
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த நபர் பிருத்விராஜ் நஸ்கர் என தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த நபர் பாஜக சமூக ஊடக பிரிவின் நிர்வாகியாக பணியாற்றி வந்தார் என்றும் தெரிய வந்திருக்கிறது. தங்களது கட்சி நிர்வாகியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சித்திரவதை செய்து கொலை செய்ததாக பாஜக குற்றம் சாட்டியது. மேலும் கொல்கத்தாவில் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக தனது மகன் ஆர்ப்பாட்டம் நடத்திய போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவரை மிரட்டியதாக கொலை செய்யப்பட்ட நபரின் தந்தையும் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவி 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நண்பனை நம்பிச் சென்றபோது நடந்த பயங்கரம்.!
பெண்ணை கைது செய்துள்ள காவல் துறை
இந்நிலையில் பாஜக நிர்வாகி கொலை தொடர்பாக பெண் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக அந்த பெண் பாஜக நிர்வாகியை கொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கூர்மையான ஆயுதத்தால் அவரை தாக்கியதால் இறந்ததாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார் என மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: எமனாக மாறிய லிவிங் டுகெதர் உறவு... கள்ளக்காதலி உயிருடன் எரித்து கொலை.!!