இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
எமனாக மாறிய லிவிங் டுகெதர் உறவு... கள்ளக்காதலி உயிருடன் எரித்து கொலை.!!
கேரள மாநிலத்தில் வீட்டிற்கு வர மறுத்த கள்ளக்காதலியை உயிருடன் எரித்து கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
லிவிங் டுகெதர்
கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சஜிமோல். இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறது. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு சிபு என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காதலிக்க ஆரம்பித்த இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தனர்.
பிரிந்து சென்ற காதலி
இந்நிலையில் சஜிமோலின் காதலனான சிபு விசா முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை பிரிந்து சென்ற சஜிமோல் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. மேலும் சிபு பலமுறை தனது காதலி சஜிமோலை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதற்கு சஜிமோல் மறுப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: "புள்ள ஒரு வாய் சோறு தான் கேட்டுச்சு.." 6 வயது மகனை அடித்து கொன்ற தந்தை.!! கொடூர சம்பவம்.!!
காதலியை எரித்துவிட்டு தற்கொலை
இதனைத் தொடர்ந்து நேற்றிரவு சஜிமோலின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற சிபு தனது காதலியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தி இருக்கிறார். அப்போது இருவருக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த சிபு தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து சஜிமோல் மீது ஊற்றி தீ பற்ற வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மீதி இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த சஜிமோலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட சிபு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஜிமோல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை; நினைவிருக்கா மக்களே?