மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: பாஜக தலைவர் காரின் மீது கல்வீசி தாக்குதல்.. பரபரப்பு சம்பவம்.. பதற்றத்தால் காவல் துறை குவிப்பு.!
காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ., எம்.பியை நேரில் சந்திக்க சென்ற பாஜக கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அமராவதி தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீத் கவூர் ராணா. இவரின் கணவர் அமராவதி, பாந்த்ரா தொகுதி எம்.எல்.ஏ ரவி ராணா. நவநீத் கவூர் ராணா எம்.பி மற்றும் ரவி ராணா எம்.எல்.ஏ ஆகியோர் மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டருகே அனுமன் ஜெயந்தியை சிறப்பித்து பாடல் பாட இருப்பதாக அறிவித்தனர்.
இந்த விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சனையில், எம்.பி மற்றும் எம்.எல்.ஏ மத உணவுர்களை புண்படுத்தியதாக ஆளும் சிவசேனா கட்சியினர் தங்களின் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு சூழல் ஏற்படவே, காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், சிவசேனா கட்சியினர் அளித்த புகாரின் பேரில் எம்.பி-யான நடிகை நவநீத் கவூர், அவரின் கணவரான எம்.எல்.ஏ ரவி ராணா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கார் காவல் நிலையத்தில் இருக்கும் எம்.பி நவநீத் கவூர், எம்.எல்.ஏ ரவி ராணா ஆகியோரை பாஜக தலைவர் கிரிட் சோமையா நேரில் சென்று சந்தித்தார். அப்போது, அங்கு கூடியிருந்த சிவசேனா நிர்வாகிகள் பாஜக காரின் மீதும், காவல் நிலையம் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் என பாஜக தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.