பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மத்திய நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன... ராகுல் காந்தி குற்றச்சாட்டு...!



BJP, RSS organizations are putting pressure on central institutions... Rahul Gandhi alleges.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணத்தின் போது பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பாஜக எப்படியும் அவரது உறவினருமான வருண் காந்தியை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து ராகுல் காந்தி;-

அவர்களின் சித்தாந்தங்கள் எங்களுடன் ஒத்துப்போகாது. வருண் காந்தி எனது பாத யாத்திரையில் பங்கேற்றால் அவர் சிக்கலை சந்திக்க நேரிடும். பாஜக அதை ஏற்காது. ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு என்னால் போக முடியாது. என் கழுத்தை அறுத்தாலும் நான் அங்கு போக மாட்டேன். என் குடும்பத்திற்கு என ஒரு சித்தாந்தம் உள்ளது, அதற்கென ஒரு சிந்தனை அமைப்பு உள்ளது. 

நான் அவரை அன்புடன் சந்திக்க முடியும், அவரை கட்டியணைக்க முடியும். ஆனால் அவருடைய சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, அதற்கு சாத்தியம் இல்லை. மேலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள், மத்திய நிறுவனங்களை கட்டுப்படுத்துகின்றன. தேர்தல் ஆணையம், நீதித்துறை மீது அழுத்தம் கொடுக்கிறது. அனைத்து நிறுவனங்களுக்கும் அழுத்தம் உள்ளது. என்று அவர் கூறினார்.