17 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை.! பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு.!



bjp-senior-leader-yeddyurappa-booked-under-pocso-act-fo

கர்நாடக மாநிலத்தில் உதவிக்காக சென்ற சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எடியூரப்பா மீது   போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் அத்துமீறல் தொடர்பாக பெங்களூரின் சதாசிவம் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 பெங்களூர் நகரை சேர்ந்த 17 வயது சிறுமி அவரது தாயாருடன் கல்விக்காக உதவி கேட்டு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சந்திக்க சென்றிருக்கிறார். அப்போது சிறுமியை தனியறைக்கு அழைத்துச் சென்ற எடியூரப்பா சிலுவைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

Indiaஇதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்  எடியூரப்பா மீது பாலியல் தொல்லை வழக்கு மற்றும் போக்சோ சட்டத்திலும்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர். மூன்று முறை முதலமைச்சராக இருந்த நபர் மீது சிறுமிக்கு எதிரான பாலியல் புகார் குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எடியூரப்பா அலுவலகம் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

Indiaஇது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது. அதில் புகார் அளித்த சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ளது. மேலும் அந்த சிறுமி இது போன்று பல புகார்களை இதற்கு முன்பு அளித்துள்ளதாகவும் எடியூரப்பா தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.