திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீடியோ: தப்பு செஞ்சிருந்தா உங்க வீட்டு., தோப்புக்கரணம் போட்டு பாஜக எம்.எல்.ஏ வாக்கு சேகரிப்பு.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் 7 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ளது. தற்போது வரை 3 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. அங்குள்ள ரோபேர்ட்ஸ்கஞ்ச் (Robertsganj) தொகுதிக்கு மார்ச் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அமோக வெற்றி பெற்று பாஜக தலைமையிலான ஆட்சியை தக்கவைக்க அக்கட்சி முயன்று வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க தீவிர களப்பணியாற்றி வருகிறது.
यूपी के एक BJP विधायक, पिछले 5 साल की गलतियों की माफी मांग रहे हैं.
— Ranvijay Singh (@ranvijaylive) February 23, 2022
क्या लगता है, जनता माफ करेगी?pic.twitter.com/VZyIBjEwgn
இந்த தேர்தலில் சர்ச்சைக்குரிய வகையில் பாஜக எம்.எல்.ஏக்கள் பேசி வாக்கு சேகரித்து வரும் நிலையில், ரோபேர்ட்ஸ்கஞ்ச் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ புபேஷ் சவுபேய் வாக்குசேகரிக்கும் போது, தனது காதுகளை பிடித்துக்கொண்டு தோப்பு கரணம் போட்டு வாக்கு சேகரித்தார்.
மேலும், "கடந்த 5 வருடமாக நான் ஏதும் தவறுகள் செய்திருந்தால், என்னை உங்கள் வீட்டு பிள்ளை போல மன்னித்து, மீண்டும் எனக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மன்றாடி வாக்கு சேகரிக்கிறேன்" என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.