பாஜக துணை தலைவரின் லீலைகள்.. விபச்சார விடுதியாக மாறிய பண்ணை வீடு.. போலீசாரின் அதிரடி சோதனை...!



BJP vice president's leilas.. Farm house turned into a brothel.. Police action raid.

அசாமில் பா.ஜ.க. துணை தலைவரின் பண்ணை வீட்டில் செயல்பட்ட விபசார விடுதியில் இருந்து  காவல்துறையினர், ஐந்து குழந்தைகளை மீட்டனர். 73 பேரை கைது செய்துள்ளனர்.

அசாமில் பா.ஜ.க. துணை தலைவரின் பண்ணை வீட்டில் செயல்பட்ட விபசார விடுதியில் இருந்து காவல்துறையினர் ஐந்து குழந்தைகளை மீட்டனர். மேலும் 73 பேரை கைது செய்துள்ளனர். கவுகாத்தி, அசாமில் பா.ஜ.க.வின் மாநில துணை தலைவர் பெர்னார்டு என். மராக் ரிம்பு. இவருக்கு மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில், காவல்துறையினர் அந்த பண்ணை  வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் நான்கு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என ஐந்து பேர் மீட்கப்பட்டனர். 

அவர்கள் சுகாதாரமற்ற அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த சிறுவர்கள் அறைக்குள் அடைபட்டிருந்ததால், மனத்தளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் சரியாக பேச முடியாத நிலையில் இருந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் காவல்துறையினரால் 73 கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ரத்தோர் கூறும்போது, ரிம்புவின் பண்ணை வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் கட்டிட வடிவமைப்பு, ஆகியவற்றால், ரிம்பு மற்றும் அவரது கூட்டாளிகளால் விபசாரம் நடத்துவதற்கான நோக்கத்துடன் கூடிய விடுதியாக செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது. விசாரணையில் ரிம்புவை ஒத்துழைக்கும்படியும், உடனடியாக சரண் அடையும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரிம்பு, முதலமைச்சர் தனக்கு எதிராக அரசியல் சதி செய்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில் இந்த பண்ணை வீட்டில் இருந்து  4 செல்போன்கள், 36 வாகனங்கள், 414 மதுபாட்டில்கள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.