மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டெல்லியில் அதிகரித்துவரும் கருப்பு பூஞ்சை தொற்று.! இதுவரை 1044 பேர் பாதிப்பு.!
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்நிலையில் தற்பொழுது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. பலர் இந்த பூஞ்சையால் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன், உயிரிழக்கவும் நேரிடுகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனாலும் இந்த நோய் தொற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தநிலையில் டெல்லியில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் தற்போது டெல்லியில், கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 1,044 பேர் கருப்பூப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
மேலும், கருப்பூப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 92 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 89 பேர் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில், கருப்புப் பூஞ்சைக்கு கிட்டத்தட்ட 10 சதவிகிதம் பேர் இறப்பது தெரிய வந்துள்ளது.