கவனமா இருங்க!! உயிரைப்பறிக்கும் கருப்பு பூஞ்சை நோயின் முக்கிய அறிகுறிகள் இவைதான்!!



Black fungus symptoms and reasons in tamil

கருப்பு பூஞ்சை நோயினால் தமிழகத்தில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்தநிலையில் தற்போது மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கமே இன்னும் கட்டுக்குள் வராதநிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை நோய் மீதான பயம் மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தூத்துக்குடியில் சமீபத்தில் உயிரிழந்தார்.

அவர் அடுத்து தற்போது விழுப்புரத்தில் மேலும் மூன்று பேர் இந்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், கட்டுப்பாடு இல்லாத அளவுக்கு இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இந்த கருப்பு பூஞ்சை தொற்று தாக்குகிறது.

இதன் முக்கிய அறிகுறிகள்:

1. முகத்தில் வீக்கம், கண்களுக்கு கீழ் வீக்கம் அல்லது நிறம் மாற்றம்

2. மூக்கடைப்பு, வாயினுள் திரவம் வழிதல்

3. ஈறுகளில் புண், பற்கள்  வேறு இடங்களில் வளர்வது போன்றவையும் கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள்

4. தலைவலி, காய்ச்சல், சைனஸ் மண்டலத்தில் பாதிப்பு, கண்களுக்கு கீழ் வலி மற்றும் பகுதியளவில் பார்வை குறைபாடு ஏற்படுவது போன்றவை இந்த பூஞ்சை பாதிப்புக்கு முக்கிய அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்