மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தறிகெட்டு பாய்ந்த கார்.. தடாலென மோதியதில் டைவ் அடித்து கோர விபத்து.. அதிர்ச்சி சம்பவம்.!
இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணின் மீது பி.எம்.டபிள்யூ கார் மோதி தூக்கி வீசப்பட்டதால் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் மாவட்டம், பல்லால்பாக் பகுதியில் பி.எம்.டபிள்யூ கார் ஒன்றினை சென்டர் மீடியனை கடந்து எதிரில் வந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் சென்டர் மீடியனுக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த ப்ரீத்தி மனோஜ் என்ற பெண் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அத்துடன் எதிர்திசையில் வந்த காரிலிருந்து அமைஜெயதேவன் என்ற ஒரு சிறுவனும் காயமடைந்துள்ளார்.
இதனை கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக பலத்த காயமடைந்த பெண்ணையும், சிறுவனையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை உண்டாக்கிய ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த நிலையில், கார் ஓட்டுனரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி பெண் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் அங்குள்ள கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.