ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கழிப்பறையில் கிடந்த ஆண் குழந்தையின் சடலம்: காவல்துறையினர் விசாரணை..!
டெல்லியில் உள்ள பொது கழிப்பறையில் ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ஷஹ்தராவில் ஜில்மில் தொழிற்சாலை பகுதியில் இருக்கும் பொதுக் கழிப்பறையில் இருந்து மூன்று வயது சிறுவனின் சடலம் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையின் உடல் பொது கழிப்பறையில் கிடப்பது குறித்து காவல் துறையினருக்கு அழைப்பு வந்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து குழந்தையின் சடலத்தின் அருகே கிடந்த குழந்தையின் உள்ளாடை, பிஸ்கட் பாக்கெட், பணம் போன்றவற்றை கண்டெடுத்தனர். குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பி வைத்தனர்.
ஷஹ்தரா துணை கமிஷனர் இதுகுறித்து கூறும்போது, குழந்தையின் இறப்பிற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றும், குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. கழுத்தை நெரித்ததற்கான தடயங்கள் எதுவும் இல்லை. உடற்கூறு ஆய்வின் முடிவிற்காக காத்திருக்கிறோம் என்று கூறினார்.