மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறும் உடல்! நரக வேதனையில் 7 வயது சிறுமி! வைரலாகும் கண்கலங்க வைக்கும் வீடியோ!
சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா என்ற பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரி என்ற 7 வயது சிறுமி. இவர் மிகவும் அபூர்வமான அதிர்ச்சிகரமான வியாதியால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் நரக வேதனையை அனுபவித்து வருகிறார்.
அதாவது சிறுமியின் உடலில் உள்ள தோல் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறி வருகிறது. மகேஸ்வரியின் ஒரு வயது முதலே இத்தகைய நோய் இருந்து வருகிறது. முதலில் உடலில் ஒரு சில பகுதிகள் மட்டுமே கல்லாக மாறி இருந்தநிலையில் தற்போது அது உடல் முழுவதும் பரவி உடலின் பெருமளவு பாகங்கள் கல்லாக மாறியுள்ளது.
இத்தகைய அபூர்வ நோயால் அவர் நடக்க முடியாமலும், எந்த வேலையும் செய்ய முடியாமலும் பெருமளவில் அவதிப்பட்டு வருகிறார். மேலும் இவர்கள் கிராமத்தில் வசித்துவரும் நிலையில் அத்தகைய நோய்க்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை.
ஆனாலும் அவரது பெற்றோர்கள் சிறுமியை நகர்புற மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்துவருகின்றனர். ஆனாலும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.