மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாணவிகளின் கழிவறையில் பிறந்த குழந்தையின் சத்தம்! விசாரணையில் கையும் களவுமாக சிக்கிய 18 வயது மாணவி!
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள மகளிர் விடுதி ஒன்றின் கழிவறையில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து விடுதியின் காப்பாளர் கழிவறைக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.
விடுதியின் காப்பாளர் கழிவறைக்கு சென்று பிரித்தபோது அங்கிருந்த வாளியில் பிறந்த குழந்தை ஒன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அது குறித்து விடுதி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால் குழந்தை யாருடையது என எந்த மாணவியும் தெரிவிக்கவில்லை. இதனால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு மாணவி மீது மட்டும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து தொடர்ந்து அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பரிசோதனையில் குழந்தை பெற்றது அந்த மாணவி தான் என தெரியவந்தது.
இதனையடுத்து குழந்தையையும், மாணவியையும் தொடர் சிகிசைக்காக போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்தது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.