மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தற்கொலை கனவால் விபரீதம்.. சொப்பனத்தை நிகழ்த்தி குடும்பத்தை அதிரவைத்த இளைஞர்.!!
தற்கொலை செய்வது போல கனவு வந்ததால், இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு, கெங்கேரி பகுதியில் வசித்து வருபவர் மங்களா (வயது 44). இவரது மகன் மஞ்சுநாத் வயது 20. இவர் செல்போன் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மஞ்சுநாத் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக டிவியில் படம் ஒன்றினை பார்த்துள்ளார்.
அப்போது அந்தப் படத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்யும் காட்சி இடம் பெற்றிருந்ததனைக் கண்டு பயந்துள்ளார். இதன் காரணமாக இவர் இரவில் தூங்கும்போதெல்லாம் 'தான் தூக்கிட்டு தற்கொலை செய்வது போல கனவு' அடிக்கடி வந்துள்ளது.
இதில் மிகவும் மன உளைச்சல் அடைந்த மஞ்சுநாத் இந்த விஷயம் தொடர்பாக தனது தாயிடம் கூறியிருக்கிறார். அதற்கு மங்களா அவருக்கு ஆறுதல் கூறிய நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.
மேலும், நேற்று முன்தினம் மங்களா வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த மஞ்சுநாத் திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தெரியாமல் வீட்டிற்கு வந்த மங்களா அவரது அறையில் சென்று பார்க்கும் போது, தூக்கில் தொங்கிய நிலையில் தனது மகன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின் இந்த விஷயம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மஞ்சுநாத்தின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்திய நிலையில், தற்கொலை செய்வது போல அடிக்கடி கனவு வந்ததனால், மன உளைச்சல் அடைந்த மஞ்சுநாத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அத்துடன் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.